சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...!!
Monday, 28 June 2021
சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...!! | bairava peedam
இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தரும்.
அதனாலாயேதான் சுப நிகழ்ச்சிகளின் போதும், வழிபாட்டின்போதும் குத்துவிளக்கேற்றுவதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம தேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் அம்சமாய் கொண்டுள்ளது.
விளக்கில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் குறிக்கிறது.
பஞ்சபூத சக்தியினை அடிப்படையாக செயல்படுவதை குறிக்கும்விதமாக விளக்கிற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது. குத்து விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். பலபேர் இன்றைய அவசர காலக்கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்பற்றுவது கிடையாது. சுத்தமாக கழுவி, மஞ்சள் குங்குமமிட்டு, பூவைத்து, பசுஞ்சாணம் அல்லது பச்சரிசியின் மீதே குத்துவிளக்கை எப்போதும் வைக்கவேண்டும். குத்து விளக்கை ஏற்றும்பொழுது ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
திரி முதலில் போட்டுவிட்டு நெய் விடுவது தவறான முறையாகும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போடவேண்டும். அதன் பின்புதான் தீபமேற்றி வழிபட வேண்டும். சரியான முறை இதுவே எனச்சொல்கிறது சாஸ்திரம்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த குத்து விளக்கை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமது இஷ்டப்படி துலக்குவது தவறான செயலாகும். அதற்கென்று பிரத்தியேக நாட்கள் உள்ளன. எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கினால் பலன்கள் கிடைக்கும்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only
இன்றைய நாள் எப்படி? ( 28.06.2021 ) | Bairava peedam
இன்றைய நாள் எப்படி?28.06.2021 தமிழ் பஞ்சாங்கம் பிலவ வருடம், ஆனி 14, திங்கட்கிழமை, |
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose on
Thursday, 24 June 2021
சகல தோஷமும் விலகிட செய்யும் பிள்ளையார் வழிபாடு !!
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார். வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார். விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும். சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும். வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும். பசுஞ்சாண விநாயகர் - நோய்களை நீக்குவார். கல் விநாயகர் - வெற்றி தருவார். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார். புற்றுமண் விநாயகர் - வியாபாரத்தை பெருக வைப்பார். மண் விநாயகர் - உயர் பதவிகள் கொடுப்பார். விஜய் சுவாமிஜி, செல் :+91 9443351497 , 9842499006. #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU #DAILYNEWS #dailyastrology Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only
Wednesday, 23 June 2021
இன்றைய நாள் எப்படி? 24.06.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? ( 24.06.2021 )
ஸ்ரீ பிலவ வருடம், ஆனி 10, வியாழக்கிழமை,
மேலும் படிக்க : https://bit.ly/3dbrI9k
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
#tamilnadu
Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only
Subscribe to:
Posts (Atom)