லிங்க
வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா...?
ஆத்ம லிங்கம்:
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம்
ஆகும்.
இவ்வகை
லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு
தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு
எனப்படும்.
இஷ்ட லிங்கம்:
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை
குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு
தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட
லிங்கம் எனப்படும்.
ஷணிக லிங்கம்:
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு
கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம்.
குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
Disclaimer: We are
publishing videos and other information on good faith and for sharing general
information purpose only
No comments:
Post a Comment