Sunday, 29 November 2015
காலபைரவர்:
பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும்
காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர். உக்கிரமானவர். ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர். இவரே கோவில்களின் காவல் தெய்வம். இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு. இவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும்.
இது முத்தொழில்களைக் குறிக்கிறது. சிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரே. இவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம்.
காலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர். அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர்.
பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர். பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம். எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும்.
காலபைரவர் காலத்தின் தெய்வம்.
காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன.
மேலும் படிக்க:http://goo.gl/6uJV6F
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment