Sunday, 22 November 2015

கார்த்திகை திங்கட்கிழமைகளில் பிரதோஷம் சங்காபிஷேகம்

இன்று பிரதோஷம்....
இரன்டுமே வருவது மிகவும் சிறப்பு அதன் சிற்ப்புகள் பற்றி இதோ. கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.. சங்காபிஷேகம் ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சங்கு. கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள். சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது. நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது. பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது. பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும். 1. வலம்புரி சங்கு, 2. இடம்புரி சங்கு. இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு கும். வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு. லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது. உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும்.... மேலும் படிக்க:http://goo.gl/T64VKQ

No comments:

Post a Comment