Thursday, 23 December 2021

இந்த விரதம் இருப்பதால் சனியின் தாக்கம் குறையுமா....? | Bairavapeedam | Vijaaiswamiji

  இந்த விரதம் இருப்பதால் சனியின் தாக்கம் குறையுமா....?

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும்தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.


விரதத்தின் பலன்கள்: இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.


மிகச் சிறப்பான கல்வி அறிவுபுத்தி கூர்மைநீண்ட ஆயுள்நிலையான செல்வம்நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால்சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

 

No comments:

Post a Comment