செவ்வாய் கிழமையில்
முருகனுக்கு விரதம் எப்படி இருக்க வேண்டும்? - அதன் பலன்கள் என்ன தெரியுமா?
செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய
நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம்
இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் என்ன
என்பதைப் பார்ப்போம்...
ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர்
அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ்
கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.
அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை
அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து
தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தங்கு தடைகள் நீங்கி
வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க
வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.
முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல்
வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் இரு
விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு
வருவதால் நம் வாழ்வில் சீரும், சிறப்புகள்
வந்து சேரும்.
விஜய்
சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Disclaimer:
We are publishing videos and other information on good faith and for sharing
general information purpose only.
No comments:
Post a Comment