Thursday, 14 May 2015

மகிழ்ச்சி ஒரு மனநிலை

மகிழ்வுடன் வாழுங்கள்! உலகில் உள்ள அனைவருமே மகிழ்வுடன் வாழத்தான் விரும்புகின்றனர். அதற்கான தேடல்களிலும் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலத்தில் மகிழ்ச்சியின் காரணிகள் நமது மகிழ்ச்சியை அதிகரித்துக்கொள்ள உதவட்டும். 1. மகிழ்ச்சி ஒரு மனநிலை: அடிப்படையில், மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலை சார்ந்ததே என்பதை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அது நமக்கு வெளியே இல்லை, அதாவது பணமோ, பொருள்களோ அல்லது பிற மனிதர்களோகூட நமக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது. மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது. எனவே, மகிழ்வான மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியம் 2. மகிழ்ச்சி ஒரு தேர்வு: மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கின்றது என்றாலும், அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம். 3. உறவே மகிழ்ச்சி: மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகள் தரும் முக்கியமான ஓர் உண்மை, நல்ல உறவுகளே மகிழ்ச்சியின் முதன்மையான காரணி. எனவே, யாருக்கு நல்ல குடும்ப உறவுகளும், நண்பர்களும் அமைந்திருக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். மாறாக, நல்ல உறவுகள் அமையாவிட்டால், எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருப்பினும் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். எனவே, குடும்பத்திற்குள் கணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் உறவை மேன்படுத்துவோம். 4. பணி நிறைவு: நமது வேலையில் நமக்குக் கிடைக்கும் மன நிறைவை மகிழ்ச்சியின் இன்னொரு காரணியாக இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது பணியில் நமக்கென்று சில இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைந்துவிட்டோமென்றால், அது மிகப்பெரிய மகிழ்வை நமக்குத் தரும். எனவே, பணி இலக்குகளை உருவாக்குவோம், அவற்றை அடைய உழைப்போம். (பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும்கூட, குடும்பத்தில் தாத்தா, பாட்டி என்னும் பணியில் மன நிறைவும், மகிழ்ச்சியும் பெறலாம்.) 5. ஆன்மீக நிறைவு: மகிழ்வின் இன்னொரு காரணி சமயச் செயல்பாடுகளில் கிடைக்கும் நிம்மதி. ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு கொண்டு, நிறைவு கொள்பவர்கள் நிறைவான மகிழ்ச்சி அடைவர். தியானங்களில், வழிபாடுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். குருக்கள், துறவிகள் இந்த ஆய்வு முடிவை மனதில் கொண்டு மக்களை ஆன்மீக நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்ல வேண்டும். குடும்பங்களில் அன்றாட குடும்ப செபம், இறைமொழி வாசிப்பு, ஆண்டுத் தியானம் போன்றவை தவறாது இடம் பெற்றால், அக்குடும்பங்களுக்கு "உலகம் தரமுடியாத" மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 6. படைப்பாற்றல்,: புதிதாகப் படைக்கும் திறன் கொண்டவர்கள் - ஓவியர்கள், பாவலர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாற்றல் படைத்தவர்கள் - மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மேலும் படிக்க:http://goo.gl/Ldi4Ze

No comments:

Post a Comment