Thursday, 7 May 2015
யோக சித்திக்கு வழிமுறைகள்
யோக சித்திக்கு வழிமுறைகள்
1. என்னிடம் மகத்தான சக்தி இருக்கிறது அதை நான் சீக்கிரம் தெரிந்து கொள்வேன். நான் யார் என்பதை தெரிந்து கொள்வேன்.
2. தீட்சை அல்லது உபதேசம் பெறுதல், மனதை ஒருநிலைப் படுத்துதல், தியானத்தில் அமைதியாக இருத்தல்: தியானம் என்பது அமைதியில் உள்ளது அதில் ஆத்மா பேசுகிறது. நாம் பேசி வீணாக்கிய சக்தி அந்தராத்மாவை காணும் தியானம் ஆகும்.
3. மறு உபதேசம் அல்லது தீட்சை: உண்மையை உணர்தல் ஆத்மாவை உணர்தல் ஆழ்நிலை தியான அனுபவங்களை பெறுதல்.
4. தினசரி காலை மாலை தியானம் செய்தல். தினமும் ஒரு முறை ஆசனம், பிராணாயாமம் செய்தல்.
5. மது, மாமிசம், கேளிக்கை கூடாது. எப்போதும் உண்மையே பேச வேண்டும். கோபம் வரவே கூடாது. மிகவும் திடசித்தமும் வைராக்கியமும் இருக்க வேண்டும்.
6. தியானத்தில் சில சித்திகள் கிடைப்பதை மற்றவர் மேல் பிரயோகிக்கவோ வெளியே காட்டவோ கூடாது. சாதனைகளை மிகவும் ரகசியமாக காப்பாற்றி வர வேண்டும்.
7. எப்போதும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தியானம் செய்ய வேண்டாம். [இது ஆரம்ப சாதகர்களுக்கு மட்டும்]
8. எப்போதும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருக்க வேண்டும். பலருக்கும் அதையோ இதையோ செய்வது கூடாது.
9. நீங்கள் பெற்ற சக்திகள் அத்தனையும் உங்களுக்காகதான். உங்கள் நன்மைக்கே. அதனால் நீங்கள்தான் பயன் பெற வேண்டும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்.
மேலும் படிக்க:http://goo.gl/3NH4iF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment