Sunday, 17 May 2015

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய நற் காலை வணக்கம் ! சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடித்திடஞ் சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே ! பொருள் : மேலை மந்திரத்தில் ஓதப்பெற்ற சோம்பல் நிலை எய்திய சிவயோகிகள் இருப்பது பரநாத வெளியில்; அவர்கள் நிலைபெற்றிருப்பது ஒளியாய் இருக்கின்ற கனகசபையின் கண்ணே; அவர்கள் அறிவு இருப்பது சுருதிகட்கு அப்பாற்பட்ட இடத்தில்; அவர்கள் சுருதிகளை ஓதி உணர்ந்தது ஆனந்த நித்திரை எய்து வதையே சித்தர்கள் நாதாந்த நிலையில் பேரின்பம் எய்தியிருப்பர்.

No comments:

Post a Comment