Wednesday, 19 August 2015
பிரத்யங்கிராதேவி
பக்த பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்கவும், அசுரனான இரண்யனை வதைக்கவும் தூணிலிருந்து வெளிப்பட்டார் ஸ்ரீநரசிம்மர், அசுரனை வதைத்தார். அதன்பின்பும் அவர் ஆவேசம் குறையவில்லை. அதைத் தணிக்கும்பொருட்டு தோன்றியவர் ஸ்ரீசரபேஸ்வரர். இந்த சரபேஸ்வரருக்கு உதவியவர்கள் ஸ்ரீபிரத்யங்கிராவும், சூலினி துர்கையும். சரபரின் தேவியர் என்று இவர்களைக் குறிப்பிடும் மந்திர சாஸ்திரம்.
பிரத்யங்கிராதேவி சிங்க முகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும், சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீலநிற ஆடையும் அணிந்த விஸ்வ ரூபத்தினை உடையவள்.
பிரத்யங்கிராதேவியை வாரத்தில் வியாழக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால் புத்ர பாக்யம் கிட்டும். வெள்ளிக்கிழமை தாமரை மலர் அணிவித்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். காலபைரவருக்கு புனுகு பூசி, அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால் திருமணத்தடை நீங்கும்.
மேலும்:http://goo.gl/c5GR6B
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment