Thursday, 3 December 2015
விஜய் சுவாமிஜி கூறும் பைரவர அஷ்டமி வழிபாடு முறை
விஜய் சுவாமிஜி கூறும் பைரவர அஷ்டமி வழிபாடு முறை:-
இன்று அஷ்டமியாகும் share all friends . இது கால பைரவரை வணங்குவதற்கு ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் நீங்கள் கால பைரவ வழிபாடு செய்தால் கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.பைரவர் சிவனது அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடி யார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.
https://www.facebook.com/vijaai.swamiji/videos/1379723848709788/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment