Thursday, 31 December 2015

வாழ்க்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !! புத்தாண்டு வாழ்த்துக்க்கள் !

புத்தாண்டு பிறக்கிறது வழக்கம் போல முடிந்த ஆண்டில் முடியாத கதைகள் விடியாத நிலைதான் மண்ணில் பலருக்கு இழப்பும் சோகமும் இருந்தன உலகில் மழையும் பொய்த்தது மடிந்தனர் சிலர் உழவும் நின்றது உழவனும் இடிந்தான் விளை நிலங்கள் பாலைவனம் ஆகியது வரும் ஆண்டில் வடிப்பதற்கு அரிசியில்லை நீரில்லா நதிகளும் நினைந்தன கண்ணீரால் கற்பழிப்புக் காட்சிகள் நாட்டையே உலுக்கின கொலைகளும் கொள்ளைக்கும் குறைவில்லை அரசியல் நாடகத்தில் அவலங்கள் அரங்கேறின ஆண்டும் முடியுது ஆவலைத் தூண்டுது ! புத்தாண்டில் புத்துணர்ச்சிப் பெற்றிடுவோம் புதுமைகள் நடந்திட காத்திருப்போம் நடந்தவை மறந்திட்டு நல்லவை பிறக்கட்டும் உழவன் வாழ்ந்திட உற்றவழி காண்போம் மழையும் பொழிந்திட மரங்களை வளர்ப்போம் நதிநீர் பங்கீடும் நல்லமுறையில் நடக்கட்டும் இயற்கை வளங்கள் இறந்திடாமல் செய்வோம் குற்றங்கள் குறைந்திட குறையிலா வாழ்வுபெற ஒன்றிடுவோம் நின்றிடுவோம் ஓரணியாய் வரும் ஆண்டில் வளமைப் பெருகட்டும் அமைதியும் ஆனந்தமும் நிலைக்கட்டும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்க்கள் !

No comments:

Post a Comment