Wednesday, 12 August 2015
தெய்வம் நமக்கு என்ன செய்கிறது?
தெய்வம் நமக்கு என்ன செய்கிறது?
நமக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் செயல்கள் அல்ல என்றே வைத்துக் கொள்வோம்.
இரவில் தாயின் அருகே படுத்து உறங்கும் குழந்தை, திடீரென கண் விழிக்கிறது. அப்போது சுற்றும் சூழ்ந்திருக்கிற இருளைக் கண்டு அது அச்சம் அடைகிறது. அச்சம் தோன்றியதும் உடனே அதற்குத் தாயின் நினைவு வருகிறது. அந்தத் தாய் எங்கே இருக்கிறாள் என்று தன் கைகளால் தடவிப் பார்க்கிறது. அவள் தன் அருகிலேயே படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டதும் அது அச்சம் நீங்கி ஆறுதல் அடைகிறது. அப்போது அந்தத் தாய் என்ன செய்துவிட்டாள்? அவள் ஒன்றுமே செய்யவில்லை. அந்தக் குழந்தை கண் விழித்ததோ அல்லது கைகளால் அது தன்னைத் தடவிப் பார்த்ததோ எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவள் தன்னையும் தன் குழந்தையையும் மறந்தவளாய் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும் அவள் தன் அருகில் இருக்கிறாள் என்ற உணர்வு ஒன்றே, குழந்தையின் அச்சத்தைப் போக்கி அதற்கு ஆறுதலை அளித்து விட்டது.
இது மாதிரி,
‘தெய்வம் நமக்கு எதுவுமே செய்ய வேண்டாம் தெய்வம் நமக்குத் துணையாக இருக்கிறது’ என்ற உணர்வு ஒன்றே நம்முடைய அச்சங்களைப் போக்கும் ஆறுதலை நமக்கு அளிக்கும்!
ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷண பைரவர் பீடம், ஸ்ரீ பைரவர் அறக்கட்டளை, காங்கயம் சாலை அவல்பூந்துறை ஈரோடு .
http://bairavafoundation.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment